புதினங்களின் சங்கமம்

சும்மா “ஒரு லேசான கணக்குப்” போட்டுப் பார்த்தேன். கவனம் மக்காள்! மிக மிகக் கவனம்!!!

196 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்வதற்காக நடக்கும் பொதுத் தேர்தலுக்கான செலவு 11 பில்லியன் ரூபாய்கள் என்று ஒரு செய்தியைக் காணக் கிடைத்தது.

சும்மா “ஒரு லேசான கணக்குப்” போட்டுப் பார்த்தேன்.

அந்த செய்தி உண்மையாயிருந்தால் ஓர் உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கான சராசரி செலவு கிட்டத்தட்ட 56 மில்லியன்கள். அதாவது ஐந்தரைக் கோடி. அத்தனையும் பொது மக்கள் பணம்.

ஐந்தரைக் கோடியென்பது நாட்டில் பெரும்பாலானவர்களுடைய வாழ்நாள் செலவு. கோடிகள் எப்படிப் போனாலும் ஒரு சில லட்சங்களையே ஒரேயடியாகக் காணாதவர்கள்தான் நாட்டில் பெரும்பாலானோர் வாழ்கின்றனர்.

நாட்டு நிலவரம் அப்படியிருக்க, இத்தனை பெருந் தொகையை செலவழித்து நீங்கள் ஒருவரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய பின்னர், அவர் உங்களது பெயரால் தனது அடுத்த பத்துப் பரம்பரைக்குமாக சொத்துச் சேர்த்து வைத்து விடுவார். பின்னர் தனது வாரிசுகளையும் அரசியலுக்குள் இறக்கி உங்கள் வாரிசுகளையும் நடுத் தெருவில் விட்டு விடுவார்.

வெறும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து வாங்கும் சாதாரண பொருளொன்றில் எத்தனை விடயங்களைப் பார்க்கிறோம்?!

சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கும் ஒரு மொபைல் ஃபோனில் எத்தனை விஷயங்களைக் கவனிக்கிறோம்?!

சில பல லட்சங்களைக் கொடுத்து வாங்கும் வாகனமொன்றில் என்னென்னவெல்லாம் கவனித்துப் பார்க்கிறோம்?!

ஐந்தரைக் கோடி மக்காள்! ஐந்தரைக் கோடி!

சிந்தியுங்கள்!!!

எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சரி; பொறுப்புணர்ச்சியும், கடமையுணர்ச்சியும், நேர்மையும், பக்குவமும், முதிர்ச்சியும், நாட்டு நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் திறனும், அறிவும், பண்பாடும் உள்ளவர்களைத் தெரிவு செய்யுங்கள்.

அப்படியானவர்களை வேட்பாளர்களாக நிறுத்துபவர்களுக்கே ஆதரவை வழங்குங்கள்.

இல்லாவிட்டால் உங்கள் பணத்தை செலவழித்து நீங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் உங்களையும், உங்கள் பரம்பரைகளையும் அழித்து நாசமாக்கி விடுவார்கள்.

கவனம் மக்காள்!
மிக மிகக் கவனம்!!!

(Thanks to Mr. Parimelazhakar)