அம்பாறையில் வெள்ளத்தில் அள்ளுண்டுவரும் அதிகளவான மீன் இனங்கள்!! மகிழ்ச்சியில் மீனவர்கள் (video)

அம்பாறையில் மாரி கால பருவ மழை ஆரம்பித்துள்ளமையினால் அங்குள்ள ஆறு, குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலத்தின் அருகே வடிந்தோடும் வெள்ள நீரில், அதிகளவானோர் சிறு மீன் முதல் பெரிய மீன்களை அத்தாங்கு மற்றும் எறி வலை ஊடாக பிடிக்கின்றனர்.

இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை, மீனவர்கள் விற்பனை செய்கின்றனர். மேலும் மக்களும் ஆர்வமாக கொள்வனவு செய்வதை காண கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதில் கோல்டன், செப்பலி, கணையான், கொய், கொடுவா, கெண்டை, விரால், சுங்கான், விலாங்கு போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்களான கெண்டை, பனையான், மீசைக்காரன் ஆகியவை குறைந்த விலையில் விற்பனையாகின்றன.

இதனால் நன்னீர் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வெள்ள நீரில் அள்ளுண்டு வரும் ஆற்றுவாழைகளை கனரக வாகனத்தின் உதவியுடன் அகற்ற பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

பாறுக்சிகான்

Image may contain: outdoor and nature Image may contain: sky, bridge and outdoorImage may contain: bridge, plant, sky, grass, tree, outdoor and natureImage may contain: sky and outdoorImage may contain: outdoorImage may contain: one or more people, child, beach, outdoor, nature and waterImage may contain: one or more people, child, outdoor and natureImage may contain: one or more people, child, outdoor and water

error

Enjoy this blog? Please spread the word :)