புதினங்களின் சங்கமம்

அவசர நேரத்தில்கூட தமிழ் மக்களுக்காக நூறு ரூபாய் இழக்க துணியாத முன்னாள் எம்.பி சிவமோகன்! அதிர்ச்சி தகவல் இதோ!!

இலங்கையில் நேற்றுமுதல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது இது நல்ல நோக்கத்திற்காக போடப்பட்டாலும் பலர் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்..

இந்த நேரத்தில் நடந்த கொடுமையான சம்பவமொன்று வன்னி மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியா குருமன்காட்டில் ஒருசில நாட்களுக்கு முன் குழந்தை பெற்ற ஒரு தாய் மகேப்பேற்றின் போது அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ஏற்பட்ட கிருமித் தாக்கத்தினால் பாதிக்கப்படு வெளியில் செல்ல முடியாமல் மனிதநேய பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ தொண்டர்களிடம் உதவி கோரியுள்ளார்.

அவர்கள் அரசியல் வாதியும் மருத்துவரும் மருத்துவ தொழிலதிபருமான சிவமோகன் அவர்களை தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டுள்ளனர், அதற்கு அவர் தனது தனிப்பட்ட வைத்திய சாலைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அந்த மனிதநேய பணியாளர்கள் அவரிடம் சென்றபோது சில மாத்திரைகளை வழங்கியுள்ளார் ..

அவசர நிலமை என்பதாலும் குறித்த வைத்தியர் இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதாலும் இந்த சேவையை இலவசமாக செய்வார் என எதிர்பார்த்த அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது .

வழங்கப்பட்ட மாத்திரைக்கு 10% கழிக்கப்பட சிட்டை வழங்கி பணம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இதை எதிர்பார்க்காத மனிதநேய பணியாளர்கள் தம்மிடம் இருந்த பணத்தை வழங்கிவிட்டு வந்துள்ளனர்.

அந்த மாத்திரைகளின் பெறுமதி 110|= கழிவு 10/= வழங்கப்பட்ட பணம் 100/= ,வெறும் 100/= மாத்திரையை கூட அவசரத்திற்கு வழங்கமுடியாத இவங்கதான் நாளைக்கு தமிழ் மக்களுக்கு தீர்வு, வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்க போகிறார்கள்..?

நீங்களே முடிவு செய்யுங்கள் மக்களே..