வவுனியாவில் பரபரப்பு!! 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலைக்கு முயன்ற தாய்!! ஒரு குழந்தை உயிரிழந்தது!!

அண்மையில் விபத்தில் மரணித்த ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றிற்குள்
போட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இரண்டரை வயதான ஆண் குழந்தை
கிணற்றிற்குள்ளேயே உயிரிழந்தது. மற்றவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பட்டிக்குடியிருப்பைச்சேர்ந்த உதயன் என்பவர் அண்மையில் விபத்தில் உயிரிழந்தார். அருடைய
மனைவி தனது நான்கு வயது பெண் பிள்ளையையும், இரண்டரை வயது ஆண் பிள்ளையையும்
கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுள் குதிக்க முயன்றுள்ளார்.

இந்தநிலையில் அயலவர்களால் தாய் தடுக்கப்பட்டு் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் இரண்டரை வயது மகன்
கிணற்றுக்குள்ளே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிருடன் மீட்கப்பட்ட 4 வயது பெண்குழந்தை அவசர சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் வவுனியா
பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மரணித்துள்ளார்.

தாயாரை பொலிஸார் நெடுங்கேணி பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)