புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் மீன்பிடி அமைச்சரை தாக்க முற்பட்ட அருச்சுனா!! தர தரவென இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி எறியப்பட்டார்! வீடியோ

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை பொலிஸார் கூட்டத்தில் இருந்து இழுத்து வெளியேற்றியுள்ளனர்.
இன்றைய தினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திருவையாறு பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து தொடர் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் குறித்த சம்பவத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் உடந்தையாக செயல்படுகிறார் என அர்ச்சுனா தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகத்தார்.

கூட்டத்தில் இருந்த சிறிதரன் எம்பி வெளியேஏரிய நிலையில் , அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை வெளியேறிச் செல்லுமாறு கூறிய நிலையில், அமைச்சர் சந்திரிசேகருக்கும், அர்ச்சுனா எம்.பிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால் அர்ச்சுனா எம்.பியை கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள். அமைச்சர் இராமலிங்க்கம் சந்திரசேகருடன், அர்ச்சுனா எம்பி முரண்பட்டுள்ளார்.

அதோடு அமைச்சரை அடிக்கவும் அருச்சுனா எம்பி கை ஓங்கியாதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சமபையில் இருந்தவர்கள் அருச்சுனாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர். இதனையடுத்து அர்ர்சுனா எம்பி பொலிஸாரால் கூட்டத்தில் இருந்து அப்புறப்பட்டுத்தப்பட்டுள்ளார்.

தொடர்ந்து பொது அமைப்புகள் மற்றும் தவிசாளர்களை இடையே ஏற்பட்ட வாய்த்தக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் இடைநிறுவே வெளிநடப்பு செய்ததை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து அரச திணைக்க அதிகாரிகளும் வெளியேறியதை அடுத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x