புதினங்களின் சங்கமம்

பிரித்தானியாவில் கால்வாயில் இருந்து ஜீவானந்த் சிவக்குமார் சடலமாக மீட்பு:!!

பிரித்தானியாவில் தமிழகத்தை சேர்ந்த இளைஞரின் சந்தேக மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவையை சேர்ந்த ஜீவானந்த் சிவக்குமார் என்பவர் பிரித்தானியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஓராண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அங்குள்ள கால்வாயில் இருந்து ஜீவானந்த் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரின் உடலில் காயங்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஜீவானந்தின் மரணம் அவரின் பெற்றோரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.