புதினங்களின் சங்கமம்

பிரதேச செயலக அதிகாரி தியாகராஜா ஜெகிருஷ்னா சம்பவ இடத்திலேயே பலி!! வீடியோ

​அம்பாறை மாவட்டம் மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு (Petrol Shed) அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் சிக்கி, அரச அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
​கதிர்காமத்தை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டி ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் பயங்கரமாக மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் வீரியம் காரணமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
​விபத்து நடந்த ஆரம்பக் கட்டத்தில் உயிரிழந்தவர் அலுவலக உடைகள் (Socks & Shoes) அணிந்திருந்ததால் அவர் காரியாலயத்திற்குச் செல்லும் ஒரு அதிகாரி என ஊகிக்கப்பட்ட போதிலும், உடனடியாக அவரின் அடையாளம் காணப்படவில்லை.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தற்போதைய தகவல்களின்படி, விபத்தில் மரணமடைந்தவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் தியாகராஜா ஜெகிருஷ்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு, கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சொந்த இடமாகக் கொண்டவர் எனவும், தற்போது பாண்டியிருப்பில் திருமண பந்தத்தில் இணைந்து அங்கு வசித்து வந்தவர் எனவும் அறிய முடிகிறது.
​விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of text that says "LANKA ASHOK LE SITB MPNA808 BNTA HN 808"May be an image of one or more people, ambulance and text that says "MOHBEEH TY TYRE YRE WO WORA"May be an image of scooter, motorcycle and textMay be an image of one or more people, tram, street and textMay be an image of one or more people, beard, people smiling and temple

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x