புதினங்களின் சங்கமம்

யாழில் மகளுக்கு டொக்டர் மாப்பிளை தேடிய பிரபல வர்த்தகர்! கஞ்சா காவாலி சுரேசுடன் ஓடிய மகள்!!

யாழ் நகரப்பகுதியில் பிரபல வர்த்தகரான ஒருவரின் 25 வயது மகள் தன்னிலும் விட வயது குறைந்த 21 வயது கஞ்சாக் காவாலியுடன் தலைமறைவாகியுள்ளாள். குறித்த காவாலி உடமையில் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவன் எனத் தெரியவருகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் கற்று வெளியேறிய மகளுக்கு மாப்பிளை பார்ப்பதற்காக பல புறோக்கர்களிடம் வர்த்தகர் மகளின் ஜாதகத்தை கொடுத்துள்ளார். தனது பரம்பரையில் இஞ்சினியர், எக்கவுண்டன் போன்றவர்கள் உள்ளார்கள் எனவும் டொக்டர் ஒருவரும் இல்லை எனவும் தனது மகளுக்கு எப்பாடுபட்டாவது டொக்டர் மாப்பிளையை தேடித்தரவேண்டும் எனவும் வர்த்தகர் புறோக்கர்மாரிடம் கூறி வந்துள்ளாராம். தனது மகளை விட 10 வயது கூடினாலும் பறவாயில்லை… எவ்வளவு சீதனம் என்றாலும் தன்னால் கொடுக்க முடியும் என வர்த்தகர் கூறி வந்ததாகத் தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே வர்த்தகரின் மகள் கஞ்சா பாவிக்கும் காவாலியுடன் ஓடித்தப்பியுள்ளாள். தனது மகளைக் காணவில்லை என வர்த்தகர் தேடத் தொடங்கும் முன்னமே மகள் தனது தாய்க்கு தன்னைத் தேட வேண்டாம். தான் சுரேஸ்சுடன் சேர்ந்து வாழவுள்ளேன் என கூறிய பின் தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளாராம். தற்போது வர்த்தகர் தனது மகளை எப்பாடுபட்டாவது அவனிடமிருந்து பிரித்து கொண்டு வருவதற்கு தலைகீழாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறித்த கஞ்சாக் காவாலி  பாட்டுக் கச்சேரிகள் நடக்கும் மேடைகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் டான்ஸ் ஆடுவதை தொழிலாகக் கொண்டவன் எனத் தெரியவருகின்றத.

கலியாணம் கட்டாமல் இருக்கும் டொக்டர்மாரே அவதானமாக இருங்கள்…