Home புதினங்களின் சங்கமம் இந்தியாவிலிருந்து படகில் கஞ்சா கடத்திவந்த காவாலிகளை துரத்திப் பிடித்த பொலிசார்!! யாழில் சம்பவம்!

இந்தியாவிலிருந்து படகில் கஞ்சா கடத்திவந்த காவாலிகளை துரத்திப் பிடித்த பொலிசார்!! யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் 368 கிலோ கேரளா கஞ்சாவுடன் காவாலி ஒருவன் கைது செய்யப்பட்ட நிலையில் , அவனுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரு காவாலிகள் தப்பி சென்றுள்ள நிலையில் , அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கேரளா கஞ்சாவை படகில் கடத்தி வருவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.

படகில் மூவர் கஞ்சாவை கடத்தி வந்து கரை சேர்க்க முற்பட்ட வேளை கரையில் பதுங்கியிருந்த பொலிஸார் அவர்களை கைது செய்ய முற்பட்ட வேளை மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் ஒருவனை மடக்கி பிடித்ததுடன் , மற்றைய இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

கடத்தி வந்த கஞ்சா பொதிகள் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் , என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட காவாலி ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட காவாலி வேலணை பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவித்த பொலிஸார் , அவனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , தப்பியோடிய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.