தூரத்தில் நின்று சுட்டால் துப்பாக்கிச் சன்னம் எப்படிப் போகும்? குற்றவியல் வழக்கறிஞர் வி.என். நவரத்தினம் ஆஜரான மயிலிட்டி கொலை முயற்சி வழக்கு.
1970 களில் நடைபெற்ற இந்த வழக்கில் குற்றவியல் வழக்கறிஞராகப் பெயர்பெற்றவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான விஎன். நவரத்தினம் அவர்கள் ஆஜரானார்.
அக்காலத்தில் வடக்கில் பிரபல்யம் பெற்றுப் பேசப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்று.
நீண்ட காலத்தின் பின் இந்த வழக்கில் எதிரிகளாயிருந்த ஒருவரைச் சில வருடங்களுக்கு முன் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் சொன்ன கதை இது.
அந்தக் காலத்தில் வல்வெட்டித்துறை, மயிலிட்டி, மாதகல் போன்ற கடற்கரைப் பகுதியில் கடத்தற் தொழில் பிரபலமான வர்த்தகத் தொழிலாயிருயிருந்தது. அதனால் தொழிற் போட்டியும் நிலவியது.
ஒரு வள்ளம் போவதற்குக் கரையிற் தயாராகும் போது இன்னொரு குழு பொலிஸாருக்கோ கடற்படைக் கோ தகவல் கொடுக்கும் வழக்கமும் மிருந்தது.இன்றைய அரசியற் போட்டியைப் போல
ஒருவருக்கெதிராக இரு முதலாளிகள் சேர்தல் பின்னர் இவரும் அவரும் சேர்தல் பின்னர் இந்த இருவரில் ஒருவர் மற்றவர்களுடன் சேர்ந்து இவருக்கெதிராக இணைந்து கடத்தற் தொழிலைச் செய்தல் என்பன அன்று நிலவியுள்ளது.’தமிழ்த் தேசியம்’ ‘ஜனநாயகம்’ விடுதலை என்ற பெயர் மட்டும் இல்லாத கூட்டு அது.’ஈழம்-போராட்டம்’ கடத்தற் தொழிலில் கடற்படையுடன் தோன்றிய மு
றுகலில் ஆரம்பித்தது என்று பேராசிரியர் நளின் சில்வாவோ, காமினி வீரக்கோனோ யாரோ ஒருவர் பேசிய நினைவு.இப்படியிருக்கையில்,
கடத்தற் தொழில் செய்யும் ஒரு குழு தங்கள் படகுகளைக் கொண்டு வந்து கரை சேர்க்கும் கடற்கரையை அண்டிய நீர்-நிலப்பகுதியில் (கடலில் )கற்களைப் போட்டு அவ்விடத்தில்
தடைகளை ஏற்படுத்துவதை இன்னொரு குழு மற்றொரு குழுவின் முதலாளிக்கு அறியத்தர அவர் தமது குழுவை (தொழிலாளர்களை );அங்கு அனுப்பிச் ‘உரிய நடவடிக்கையை’ எடுக்கும்படி பணித்துள்ளார்.
இவர்கள் அவ்விடத்திற்குப் போய் 12 ஆம் இலக்கத் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட அவர்களும் ( சுமார் முப்பது பேராம்) துப்பாக்கிகளைக் காட்டியதுடன் நிலைமை உக்கிரமாக அவர்கள் இவர்களை நோக்கிச் சுட்டுள்ளனர். இவர்களும் சட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் காயமுற்று விழ இவர்கள் ஓடித் தப்பிவிட்டனர்.
வழக்கில் எதிரியான துரையன் ( வேறு பெயர்) கடலில் நின்றவரின்காலிற் சுட்டதாக சாட்சியங்கள் தெரிவித்தன. நான் குறிப்பிட்ட நண்பர் அது பற்றி மேலும் சொல்கையில் அமரர் வீ. என். நவரத்தினம் ஒருமுறை கடலைப் ( சம்பவம் நடந்த இடத்தைப் )போய்ப் பார்த்தாராம்.
இவர்கள் நின்று சுட்ட இடத்தைப் பார்த்தாராம். இவர்களில் முதலாவது எதிரி மட்டும் தான் 12 ஆம் இலக்கத் துப்பாக்கி வைத்திருந்தார் என்பதையும் அவர்களில் மூவர் வைத்திருந்தனர் என்றும் விபரங்களைப் பெற்று விட்டுச் சென்றுவிட்டாராம். அந்த நேரத்தில் ஐயாயிரம் ரூபாயைத் தங்கள் முதலாளி அவருக்குச் சன்மானமாகக் கொடுத்தாராம்.
தங்களிடம் அங்கிருந்து சுட்டவர்கள் எங்கு எங்கு நின்று சுட்டனர் என்று கேட்டாராம்.
நாங்கள் அவர்களில் மூவர் கடலுக்குள் நின்று சுட்டனர் என்பதையும் சூடு வாங்கியவர் கல்லடியில் நின்று சுட்டார் என்பதையும் சொன்னார்களாம்.இவர்கள் எங்கே நின்றனர் என்று அவர் கேட்டபோது தாங்கள் வீதிக்கருகில் நின்று சுட்டதாகச் சொல்லியுள்ளனர். வழக்கின் பதிவில் இவர்கள் கடலுக்கு அருகில் வந்து சுட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அங்கிருந்து கல்லின் மேல் நின்றாரா கடலில் நின்றாரா என்று கேட்டாராம்.எவ்வளவு தூரத்தில் நின்றார்கள் ? கடலில் நின்று சுட்டனர் 30 40 அடி தூரத்தில் நின்றார்.மற்றவர்கள் சில அடி தூரத்தில் அவர் பின்னால் நின்றனர்.தங்களில் ஒருவர் அவர் கல்லில் ஒரு காலை வைத்து எழுந்த படி சுடக் கண்டதாகச் சொன்னாராம்.நான் கேட்டால் மட்டுமே நீங்கள் எல்லாரும் அப்படிச் சொல்ல வேண்டும், மற்றும்படி சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டுப் போய்விட்டாராம்.
அதன் பிறகு அவர் எதிரிகள் தரப்பினரைச் சந்திக்க வில்லையாம்.
அதனால் தங்களுக்கு ஒரே யோசனையாம். ஐயாயிரம் ரூபாயும் வாங்கி எங்களை ஒன்றும் ஆயத்தப் படுத்தாமற் போய்விட்டார் என்று.வழக்கு விசாரணை வந்த போது அவர் சாட்சிக் தீர்ப்புகளைக் குறுக்கு விசாரணை செய்துவிட்டு இவர்களையும் சில கேள்விகள் கேட்டு விட்டு
சட்ட வைத்திய அதிகாரியையும் விசாரணையை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியை யும் குறுக்கு விசாரணை செய்தாராம். சட்ட வைத்திய அதிகாரியிடம் சன்னம் நுழையும் இடத்தில் உள்ள விட்டம், வெளியேறும்போது அவ்விடத்துக் காயத்தின் விட்டம் , இரண்டுக்குமிடையிலுள்ள தூரம் என்பவற்றையும் கேட்டாராம்.
வி.என். ஒரு படத்தில் ஒரு கால் கல்லொன்றில் வைக்கப்பட்டு நிற்பவர் கல்லை விட உயரம் குறைந்த தரையில் நின்றால் கால் எப்படி படிந்திருக்கும் என்பதையும் அந்த உயரத்தை விட உயரம் கூடிய இடத்திலிருந்து சுட்டால் சன்னம் காலில் எங்கு புகுந்து எங்கு வெளியேறும் என்பதை அதாவது நேராகப் போகாது – சரிவான கோணத்திற் போயே வெளியேறும் எனக் காட்டி நேராக முன்னிருந்து சுட்டிருந்தால் சன்னம் நேராகவே சென்று மறுபக்கத்தால் வெளியேறியிருக்கும். ஆனால் இது சரியாகச் சென்றிருக்கிறது.
இவரது காலின் தொடையில் மேலால் நுழைந்து மறுபக்கத்தால் கீழால் வெளியேறியிருக்கிறது.
சன்னம் தொடையிற் போன திசையின் பார்த்தால் சன்னம் நேராக இருந்து வரவில்லை. சற்று மேலிருந்து வந்துள்ளது.இரவு நேரத்தில் இவர்கள் கலவரப் படும்போது மேலிந்து யாரும் சுட்டிருக்கலாம் என்று படத்தின் மூலம் விளக்கினாராம்.மயிலிட்டிக் கொலை முயற்சி வழக்குத் தள்ளுபடி யானது.
தூரம் , சுடப்படுபவரின் வேகம், திசை , சுடு பவரின் அசைவு வேகம் அவர் சுடும் போது நிற்கும் திசை , சுடும் துப்பாக்கியின் நிலையின் உயரம் எனாபதற்கு வீ.என் நவரத்தினம் அவர்களின் இந்த வழக்கு குறிக்கத்தக்க ஒன்றாக அப்போது பெயர் பெற்றது.
படங்கள் வீக்ககப்பீடியா; மெற்றா ஏ.ஐ

