சஹ்ரானின் வீட்டுக்குச் சென்ற ரிஷாத்தின் அமைச்சு வாகனங்கள்!! நெருங்கிய தொடர்பு!!
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்துக் காட்டுவேன். அதற்கான ஆதாரங்கள் கைவசம் இருக்கின்றன”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ எம்.பி. சூளுரைத்துள்ளார்.
நேற்று -05- நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் விமல்வீரவன்ஸ மேலும் கூறுகையில்“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இன்னும் சில நாட்களில் நிரூபித்துக்காட்டுவேன்.
21/4 தாக்குதலுக்கு சதொச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாய்ந்தமருதுவிலுள்ள சஹ்ரானின் வீட்டுக்கும் வாகனங்கள் சென்றுள்ளன.
இவ்வாறு நடக்கவில்லையென்றால், நான் கூறுவது பொய்யெனில், ‘இல்லை’ என பகிரங்கமாக அறிவிப்பொன்றை விடுக்குமாறு ரிஷாட்டுக்கு சவால் விடுக்கின்றேன்.
தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்க தயார் என ரிஷாட் அறிவிப்பாரானால், நாளையே ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.” என்றார் விமல்வீரவன்ஸ.