எங்களைப் பற்றி தெரியாது உங்களுக்கு!! யாழ் நகரப்பகுதி சைக்கிள் பார்க் ரவுடிகளின் கைகளிலா?
யாழ் நகரப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பிடவைக்கடைகளுக்கு செல்பவர்கள் அக் கடைகளின் முன் தமது வாகனங்களை நிறுத்தும் போது அவர்கள் நிறுத்தும் மோட்டார் சைக்கிளுக்கு 30 ரூபா வரி யாழ மாநகரசபை குத்தகைகாரர்களால் அறவிடப்படுகின்றதாம். மோட்டார் சைக்கிள்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு நுாறு ரூபாக்களுக்கு மேல் வரி அறவிடப்படுவதாக தெரியவருகின்றது. யாழில் உள்ள பிடவைக்கடைகள் மற்றும் பல கடைகளும் தமக்கான வாகனத் தரிப்பிடங்களுக்கு யாழ் மாநகரசபைக்கு வரி செலுத்தி வருகின்றனர். அந்த தரிப்பிடங்களில் தமது வாடிக்கையாளர்கள் வந்து வாகனங்களை நிறுத்தும் போதும் அவர்களுக்கும் வரி அறிவிடப்படுகின்றதாம்.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் யாழில் உள்ள பிடவைக்கடைக்கு சென்ற பெண்கள் இருவர் தமது மோட்டார் சைக்கிளை பிடவைக்கடைக்குரிய வாகனத்தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டுச் சென்ற போது அவர்களுக்கு வரி அறவீட்டு பற்றுச் சீட்டு வழக்க முற்பட்டுள்ளார்கள் மாநகரசபை குத்தகைகாரர்கள். தாங்கள் புடவைக்கடைக்குரிய தரிப்பிடத்திலேயே நிறுத்ததியுள்ளதாக கூறிய போது குறித்த குத்தகைக்காரர்களான காவாலிகளில் ஒருவன் ”எங்களைப் பற்றி தெரியாமல் எங்களோட முரண்படுகிறீர்கள்” என அச்சுறுத்தியுள்ளாராம். அவர்கள் கொடுத்த பற்றுச்சீட்டில் காணப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் வட்சப் எண்ணில் காணப்பட்ட சானுஜன் என்பனது புகைப்படத்தையே நாம் இங்கு பிரசுரித்துள்ளோம். காவாலிகள் கடைப்புளிகளுக்கு யாழ் மாநகரசபை குத்தைகைக்கு கொடுத்து யாழ் நகரப்பகுதி வரும் பொதுமக்களை கடும் அச்ச சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.


