புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பல கோடிகளுடன் தலைமறைவான உதயகலா கனடாவில்! திடுக்கிடும் தகவல்

மண்டபம் அகதிகள் முகாமில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த முன்னாள் விடுதலைப்புலி இயக்க பொறியாளர் தனது குடும்பத்தினருடன் மாயமான நிலையில் கனடா நாட்டில் வசிப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தனுஷ்கோடிக்கு 2014 மே மாதம் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த தயாபரராஜ் உதய கலா தம்பதியினர் தங்களது 3 பெண் குழந்தைகளுடன் தமிழகம் வந்தனர்.

தயாபரராஜ் முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தகவல் தொழில் நுட்ப பொறியாளராக இருந்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் பல்வேறு மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 4 குழந்தைகளுடன் முகாமில் இருந்த அவர்கள் மே 20 ல் முகாமைவிட்டு வெளியேறி ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்தனர்.

இவர்கள் முகாமிற்கு திரும்பாததால் ஓம்சக்தி நகரில் பார்த்த போது குடும்பத்தினருடன் ஜூன் 8 ல் மாயமானது தெரிய வந்தது.

இது குறித்து அகதிகள் முகாம் தனித்துணை தாசில்தார் ரவி மண்டபம் போலீசில் ஜூன் 20 ல் புகார் செய்தார்.

போலீசார் விசாரணையில் உதயகலா பலரிடம் பல கோடிகளை கடன் வாங்கி அதனைக் கொடுக்காமல் தலைமறைவாகினார்கள்.

தன் மீது பண மோசடி புகார் கொடுக்கப்போவதை அறிந்த உதயகலா கணவர் தயாபரராஜ் மற்றும் 4 குழந்தைகளுடன் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு தப்பியிருக்கலாம் என தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணையில் கனடாவிலிருந்து உதயகலா தமிழகத்தில் சிலருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர்களை தமிழகம் கொண்டு வர கனடா நாட்டின் மூலமாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இலங்கை அரசும் தயாபர ராஜ் உதயகலா தம்பதியரை தேடி வருவதால் அவர்களும் கனடா நாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.