கொழும்பில் இன்று ஒரே நாளில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் மீட்பு!
கொழும்பில் இன்று ஒரே நாளில் 3 அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டன.
கொலனாவைப் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து இன்று பிற்பகல் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
கொழும்பு வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிக்கு இடைப்பட்ட கடற்கரையிலிருந்து இன்று காலை இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்த சடலங்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இவ்வாறு இன்று மீட்கப்பட்ட 3 சடலங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
