யாழில் மிகப் பெரிய ரவுடியான சிறைக்காவலன் நந்து கைது!! கே.பியின் அக்கா மகனாம்!!
பூமாலைராசா நந்தகுமார் என்னும் சிறைக்காவலன் மானிப்பாய் பகுதியில் வீடடை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.
குறித்த நந்தகுமார் 2014 ம் ஆண்டு யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைத்திருந்த கைதியை தாக்கி அவர் மரணத்திற்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தார். நந்தகுமாரின் கீழ்க்கண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் அவனுடைய பதவியின் கண்ணியத்தையும் சட்ட ஒழுங்கையும் மீறுகின்றன
1. விளக்க மறியலில் உள்ள கைதியை சித்திரவதை செய்தல் , விளக்க மறியலில் உள்ள கைதியை தாக்குவதற்கு எதிர் தரப்பினரிடமிருந்து இலஞ்சமாக பணம் பெறுதல்
2. சித்திரவதை செய்யாமல் இருப்பதற்கும் இலஞ்சம் பெறுதல்: சில சந்தர்ப்பங்களில், விளக்க மறியலில் உள்ள கைதிகளை சித்திரவதை செய்யாமல் இருப்பதற்காக கைதியின் குடும்பத்தாரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
3. தவறான வழி நடத்தல்: சிறு குற்றங்களின் கீழ் தண்டனை பெற்று பிணையில் வெளிவந்த கைதிகளை துஷ்பிரயோகம் செய்து, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளார். குறித்த தண்டனைக் கைதிகளை ஒருங்கிணைத்து பல்வேறு சமூகசீரழிவுகளை யாழில் செய்து வந்தான்.
4. சட்டவிரோத நிதி வியாபாரம்: சம்பந்தப்பட்ட அதிகாரி, தனது அதிகாரத்தைக் கையாள்ந்து, முன்னாள் கைதிகளை மிரட்டி பணம் மற்றும் சொத்துகளை பறித்துள்ளான். மேலும், சட்டவிரோதமாக பணத்தினை வட்டிக்கு கொடுத்து வந்துள்ளான்.
5 சடடவிரோதமாக லஞ்சமாக பெற்ற பணத்தினை வட்டிக்கு கொடுத்தல் வட்டிப்பணத்தினை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி, தனது அதிகாரத்தைக் கையாள்ந்து, முன்னாள் கைதிகளை பயன்படுத்துதல் வெளிநாட்டில் உள்ளவர்களின் காணிகளை பிடித்தல் . எல்லைகளை அகற்றுதல் போன்றனவாகும்.
குறித்த நபர் புலிகளின் நிதிசேகரிப்பில் ஈடுபட KP பத்மநாதன் என்பவருடைய சொந்த அக்காவின் மகன் ஆவார். இவருடைய செல்வாக்கையும் தனது பதவியில் அதிகாரத்தையும் கொண்டு பல சமூகசீர்கேட்டில் ஈடுபட்டு வருகிறான்.

