புதினங்களின் சங்கமம்

யாழில் போதை மாத்திரைகளுடன் 2 சிறுவர்கள் கைது!!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் சிறுவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ,  16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் மூவர் கைது செய்யப்பட்டு , அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 20 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.