மட்டு’வில் இரட்டைக் கொலை சந்தேகநபர் பொலிசாரின் கைத் துப்பாக்கியைப் பறித்துச் சென்றதால் பதற்றம்!
இரட்டை கொலை குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்த செம்மண்னோடை அலி அக்பர் எராவூரில் கைது செய்யப்பட்டுள்ளார்..இவர் சிறையில் இருந்து வந்ததில் இருந்து எமது பிரதேச மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர்..
இச்சம்பவம் இன்று 20.04.2026 காலை இடம்பெற்றுள்ளது.நீதிமன்ற வாசலில் நின்ற இவர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் துப்பாக்கியை திடீரென பறித்துக்கொண்டு ஓடமுற்பட்ட வேளை பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப்பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து நீதிமன்ற பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
கைதுசெய்யப்பட்ட நபர் தற்போது ஏறாவூர்ப் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த நபர் வழக்கு விசாரணை யொன்றிற்காக நீதிமன்றிற்கு வருதந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இவர் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்டு வாழைச்சேனை நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டவரென தெரியவந்துள்ளது.


