யாழில் காதலியின் அம்மாவைக் கட்டிப்பிடித்த பல்கலைக்கழக மாணவன் நையப்புடைப்பு!!
யாழ் நல்லுார் பகுதியில் 23 வயதான கொழும்பு பல்கலைக்கழக மாணவன் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளார். யாழ் நுண்கலைப்பீட மாணவியான தனது காதலியைச் சந்திக்கச் சென்ற சமயத்தில் காதலியின் வீட்டில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த காதலியின் தாயான வங்கி ஊழியரைக் கட்டிப்பிடித்த போது காதலியின் தாயார் குக்குரல் இட்டுள்ளார். இதன் பின் அருகில் இருந்த வாகன திருத்தகத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் அயலவர்கள் வீட்டுக்குள் நுழைந்து மாணவனை பிடித்து வெளியே கொண்டு வந்து கும்பிடக் கும்பிடத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. அதன்பின்னர் வீட்டின் மாமரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாணவன் காதலி வீட்டுக்கு வந்த பின் அவிழ்த்து விடப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. கடந்த புதன் கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதே வேளை மாணவியும் தாயாரும் ஒருமாதிரியான உருவ ஒற்றுமை கொண்டவர்கள் எனவும் வங்கி ஊழியரான தாயார் வங்கி சென்று விட்டதாக நினைத்து வீட்டில் காதலி தனியே அறை்ககுள் குளிக்கின்றாள் என நினைத்தே மாணவன் குளியலறைக்குள் நுழைந்தாகவும் தாயாருக்கு தான் யார் என தெரியாது என்பதால் தாயர் குக்குரல் இட்டு கத்தியதாகவும் மாணவனை விசாரித்த போது மாணவன் தெரவித்துள்ளார். காதலியும் மாணவனும் இவ்வாறு பல தடவைகள் குறித்த வீட்டில் சந்தித்திருந்ததாகவும் மாணவன் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்த காதலியின் தகவல்களை அடுத்து மாணவன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படாது விடுவிக்கப்பட்டுள்ளார்.மாணவியின் தாயார் வங்கி ஊழியராகவும் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவன் கட்டி வைத்து தாக்கப்படும் வீடியோ வாகனத்திருத்தகத்தில் இருந்த இளைஞரால் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டு காதலியின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.