புதினங்களின் சங்கமம்

திருக்கோணேஸ்வர கோவில் ஐயரினால் கொலை செய்யப்பட்ட மனைவி! இருபது வருடங்களின் பின் ஒப்படைக்கப்பட்ட எலும்புக்கூடு

திருகோணமலை-கோணேஸ்வர ஆலயத்தில் கடமையாற்றி வந்த விஸ்வகேஸ்வர ஐயரினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடு சுமார் இருபது வருடங்களின் பின்னர் அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையிலேயே எலும்பு கூடு இன்று (05) அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை கோணேஸ்வர கோயிலில் பூசகராக கடமையாற்றிய விஸ்வகேஸ்வர ஐயருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதனையடுத்து குறித்த பூசகர் மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு மேல்முறையீடு செய்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் வழங்கிய தீர்ப்பு சரி என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 19ஆம் திகதி குறித்த ஐயரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவரது மனைவியின் எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தில் இருப்பதாகவும் அதனை எடுத்துச் செல்கிறீர்களா எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பினார்.

இதே நேரத்தில் அவரது மகனாகிய விஸ்வகேஸர் வெங்கடேஸ்வரர் சர்மாவிடம் ஒப்படைக்குமாறு கூறியதையடுத்து இன்று திருகோணமலை நீதிமன்றத்திற்கு அவரை அழைத்து குறித்த அவரது மனைவியின் எலும்புக்கூடு மற்றும் சில சான்றுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

அதில் அல்பங்கள், டயரி மற்றும் பிராமணர் தாலிக்கொடி, நூல் மற்றும் பழைய புடவை கொண்ட பெட்டி என்பவற்றை அவரது மகனிடம் ஒப்படைத்தனர்.

குறித்து எலும்புக்கூட்டை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று காவடி தெற்கு கொக்குவில் என்ற பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று காவடி தெற்கு இந்து மயானத்தில் புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ மன்று அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

(அப்துல்சலாம் யாசீம்)

Image may contain: 6 people, people smilingImage may contain: 2 people, childNo photo description available.Image may contain: foodImage may contain: 6 people, people smiling