கனடாத் தமிழரும் கவர்ச்சி நடனமும்.
இத்தகைய நடனங்களைக் கனடாவில் தமிழ் வணிக நிறுவனங்களின், பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றுகூடல்களில், குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களில் அடிக்கடி பார்க்கலாம். பல ஆண்டுகளாக இது நடக்கிறது.
சில இடங்களில், இங்கு எழுதமுடியாத அளவு அசிங்கமான ஆடைகள் அணிந்திருப்பார்கள் இப்பெண்கள் (விளக்கம் வேண்டுவோருக்குத் தனிப்பட்ட முறையில் விளக்கப்படும். கேட்டுவிட்டு என்னைத் திட்டக்கூடாது).
இவர்களைத் தமிழ்ச்சமூகத்தின் நிகழ்வுகளில் இடம்பெறச்செய்வதில் விருந்து மண்டபத்தினருக்குப் பெரும்பங்குண்டு.
இப்படி ஒரு நடனம் நடக்கவிருந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களிடம், “இந்த நடனத்துக்கான தேவை என்ன? பெண்கள் அருவருக்கிறார்கள்” என்றபோது, “அறுபது தாண்டியவர்கள்தாம் விடாப்பிடியாக நிற்கிறார்கள்” என்று பதில் கிடைத்தது.
காணாததையா காணப்போகிறார்கள்!!!
“முகநூலில் கிழிப்பார்கள். அப்போது வருந்தி ஒன்றும் ஆகப்போவதில்லை” என்று சொன்னேன். வேறு தரப்பிலிருந்தும் வந்த அழுத்தங்களால் அந்த அமைப்பினர் இனி இந்த நடனம் வேண்டாம் என்று முடிவெடுத்தனர். அப்போது தான் ஒரு புகழ்பெற்ற பள்ளிக்கூடப் பழைய மாணவர் சங்கம் முகநூலில் இது விடயத்தில் கிழி வாங்கியிருந்தது.
நிகழ்வுகளில் இந்நடனம் இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிவித்தால், நிகழ்வுக்கு வருவதா இல்லையா என்று பலரும் முடிவெடுக்க உதவியாயிருக்கும்.
குழந்தைகளும் பெண்களும் என் போன்றோரும் வரும் நிகழ்வுகளில் இந்த நடனம் வேண்டும் என்போர், எங்காவது ஆடை அவிழ்ப்பு நடனம் (strip dance) பார்க்கப்போவதுதான் பொருத்தமானதாயிருக்கும்.
(படம்: முக்கால் நூற்றாண்டு கண்ட ஒருவரின் முகநூலில் சுட்டு, வெட்டியது).