உறுதியான வீட்டை உடைத்து பாடசாலை மாணவியை நசுக்கிய காட்டுயானை!! அதிர்ச்சிக் காட்சிகள்!! (Photos)
காட்டு யானையின் தாக்குதல் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்து சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மஹியங்கனை தம்பகல்ல பிரதேசத்தில் உள்ள குடாவெவ கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது.
அங்குள்ள வீடொன்றினுள் புகுந்த காட்டுயானை வீட்டின் சுவர்களை முட்டித் தள்ளியுள்ளது.
இதன்போது இடிந்து வீழ்ந்த சுவரினுள் அகப்பட்டு எட்டு வயதுச் சிறுமியொருத்தி உயிரிழந்துள்ளார்.
அவரின் பாட்டி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஹியங்கனை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.



