நல்லூர் ஆலயச் சுற்றாடலில் பெரும் தேடுதல்…! கடந்த மூன்று நாட்களில் மட்டும் சிக்கிய 109 நாய்கள்.
நல்லூர் ஆலயச் சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை ஆரம்பமாகிறது.அதனையடுத்து நல்லூர் ஆலய சூழல் உள்ளிட்ட பகுதிகளில் கட்டாகாலி நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்தனர்.

