வல்லிபுரக் கடலில் காணமல் போன வேம்படி மகளீர் கல்லுாரி ஆசிரியர் வைஷ்ணவனை பாரிய சுறா தாக்கியதா?
கடலில் காணாமல் போன ஆசிரியர் இதுவரை மீட்கப்படவில்லை ; தேடும் பணி தொடர்கின்றது !
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்த திருவிழாவில் சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 30 வயதுடைய தயாரூபன் வைஷ்ணவன் தனது தாயாருடன் ஆலயத்திற்கு சென்றுள்ளார் தாயாரிடம் தனது உடமைகளை கொடுத்துவிட்டு கடலில் நீராடியுள்ளார் .
பல மணி நேரமாக தாயார் தேடியும் மகன் கடலில் இருந்து திரும்பவில்லை அதன் பின் பொலிஸார் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு தேடும் பணிகள் இடம் பெற்றது .
இன்று வரை அவர் தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுள்ளது. இதே வேளை குறித்த கடற் பகுதியில் பாரியளவான சுறா மீன்களின் நடமாட்டம் அதிகளவு காணப்படுவதாகவும் ஆசிரியர் கடலில் மூழ்கிய பின் சுறா மீன்களால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் குறித்த கடற்பகுதியில் மீன் பிடிப்பவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.