புதினங்களின் சங்கமம்

யாழ் மறுவன்புலவுப் பகுதியில் வித்தியாசமான முறையில் கசிப்பு காய்ச்சிய கில்லாடிகள்!!(Photos)

பெரிய அளவில் கசிப்பு காய்ச்சினால் காய்ச்சும் போது வெளியேறும் புகையால் மற்றவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள் என்று, சிறிய அளவிலான பாத்திரங்களில் கசிப்புக் காய்ச்சியுள்ளார்கள் கில்லாடிகள். யாழ் தென்மராட்சி மறுவன்புலவுப்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த பொலிசார் குறித்த கில்லாடிகளின் செயற்பாட்டை பிடித்துள்ளனர். இதே வேளை குறித்த பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லாத வேறு இடத்தவரே அங்கு வந்து இவ்வாறான இழிவேலைகளைச் செய்வதாகவும் அத்துடன் ஆடு, மாடு, கோழி கடத்துவதாகவும் பல திருட்டு வேலைகளில் ஈடுபடுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Image may contain: outdoorNo photo description available.Image may contain: one or more people, people standing and drinkNo photo description available.