புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் வடமராட்சியில் பொம்பிளை எடுக்க தயங்குவது ஏன் தெரியுமா?

பேஸ்புக்கில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
அண்ணா வடமராட்சி பொம்பிளையா?
ஐயோ வேண்டாம் என்டு சொல்லுங்க அண்ணா அதுகள் வாய்கார பொம்பிளைகள்
அடேய் அவளுகள் வடமராட்சி girls
அவளுகளோட friendship சரிவராது திமிர்ப்பிடிச்சவளுகள்
அது வடமராட்சிப் பிள்ளை
அது அப்பிடி தான் arrogant
என்னம்மா உங்கட மகனுக்கு வடமராட்சி
பொம்பிளையாம் உண்மையா?
அப்ப இனி நீங்கள் உங்கட மகனை
மறந்திட வேண்டியது தான்…..
ஏன் இவ்வளவு விமர்சனங்கள் வடமராட்சிப் பெண்கள் பற்றி?????
University, வேலைத்தளம், அலுவலகம், குடும்பம் என எல்லா இடங்களிலும் வடமராட்சி பெண்கள் என்றால் ஒரு வித்தியாசமான பார்வை
திமிர் காரி, சண்டைக்காரி, வாய்காரி, கோபக்காரி எனப் பல பெயர்களால் உவமிக்கப்படுகிறாள் வடமராட்சிப் பெண்…..
அது
திமிரல்ல எதற்கும் அஞ்சாதவள் தற்துணிவு கொண்டவள்
சண்டைக் காரியல்ல நியாயத்திற்காக விவாதிப்பவள்
வாய்காரியல்ல நேருக்கு நேர் குரல் கொடுப்பவள்
கோபக்காரியல்ல அதீத அன்பால் கட்டிப்போடுபவள்
பயமறியாள்
குணமானவள்
தலைக்கணமற்றவள்
வலிமையானவள்
எளிமையானவள்
தனித்திறமையானவள்
துணிந்தவள்
நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் தன்னகத்தே கொண்ட பாரதியின் புதுமைப்பெண் தான் இவளோ!!!!
……… கொஞ்சம் திமிராகத்தான் தெரிவாள் வடமராட்சிப்பெண்……….
From – JG
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x