யாழில் இன்னொரு மருத்துவ கொடூரம்!! சிகிச்சை இன்றி பலியான கலைவானி ஆசிரியை!!
பாடசாலை நலன் விரும்பி ஒருவரால் அனுப்பபட்ட தகவல்…
பாடசாலை ஆசிரியை ஒருவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காலை கூட்டத்தில் மயங்கி விழுந்தார் அத்தோடு தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் உடனடியாக அரச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வாகனத்தின் ஊடாக அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது அதில் அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதனை நரம்பு சார்ந்த dr க்கு காட்டுமாறு கூறப்பட்டது ஆனாலும் அவர் தனது விடுமுறைக்குச் சென்றதால் இரண்டு கிழமைகள் அவர் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை வேறு தெரிவுகளும் அந்த ஆசிரியருக்கு கூறப்படவில்லை மூன்று பிள்ளை கொண்ட அந்த தாய் இன்று மூளை நரம்பு வெடித்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
இப்போது சொல்லுங்கள் நாங்கள் நகரத்தில் இருக்கின்றோமா அல்லது நரகத்தில் இருக்கின்றோமா????? மீண்டும் ஒரு மருத்துவத்தவறால் அவரின் உயிர் போனது??????? பாடசாலை தொடங்கும் போது பாடசாலையில் கால் பதித்தவர் அவருக்கு சென்ற வருடம் 2023 உடன் குறித்த பாடசாலையின் பணிக்காலம் முடிவடைந்துவிட்டது அவர் விரும்பி இருந்தால் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கலாம் பாடசாலை அதிபர் கேட்டபோது அவர் கூறிய ஒரே பதில் “Sir நான் நீங்கள் இருக்கும் மட்டும் இருந்து விட்டுப் போகின்றேன்“ என்றார். பாடசாலைக்கு முதல் ஆசிரியராக எப்போதும் பிள்ளைகளை வழி நடத்திக் கொண்டிருப்பார் வந்துகற்பித்தலில் பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்த ஒரு தாய் இன்று மூச்சடங்கி கிடக்கின்றாள். ஒரு மாதத்துக்கு முன்னர் தனது உடல் உபாதையும் கருத்தெடுக்காமல் பாடசாலைக்கு வந்து காலை கூட்டத்தில் நற்சிந்தனை கூறிக் கொண்டிருந்தபோது மயக்கமுற்து கீழே விழுந்தார் எந்தப் பாடசாலைக்கு அயராது உழைத்தாரோ அதே பாடசாலையின் மண்ணில் தலை சாய்ந்து விழுந்தார். கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசி ஊடாகவே பிள்ளைகளுக்கு என்ன படிப்பிக்க வேண்டும் என்பதை சக ஆசிரியர்களுக்கு கூறிவழிப்படுத்திக் கொண்டிருந்தார். இறுதியாக பாடசாலை அதிபரிடம் பேசிய போது தான் பாடசாலைக்கு திங்கள் வரப்போவதாகவும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்றும் கூறினார் அவருக்கு விருப்பமான சக ஆசிரியை செல்வா வீட்டுக்குச் சென்று அவர்களின் கையால் டீ குடித்துவிட்டு சாரி ஒன்றையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார். பிள்ளைகளின் உணவு விடயத்திலும் அதீத ஈடுபாடு கொண்டவர் என்ன வேலை சொன்னாலும் முடியாது என்று சொல்லாமல் எனக்கு வலதுகரமாக தோளோடு நின்ற அன்பு தாயே சகோதரியே உமது பணி பலாலி வடக்கு பாடசாலையில் எ ப்போதும் நினைவு கூரப்படும் சென்று வா தாயே உமது ஆத்மா சாந்திக்காக நாங்கள் எல்லோரும் தலை சாய்த்து வணங்குகின்றோம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
நன்றி
பாடசாலைச் சமூகம்