புதினங்களின் சங்கமம்

விகாரைகள் மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ள முயன்றனரா முஸ்லீம் பெண் தீவிரவாதிகள்?? (Photos)

சாய்ந்தமருது வீட்டுக்குள் ஐ.எஸ் அமைப்பின் தொடர்புள்ள
சில முஸ்லிம் இளைஞர்கள், அவர்களின் குடும்பங்கள் கடந்த 26ம் திகதி
முற்றுகையிடப்பட்டிருந்தனர். மனித வெடிகுண்டாகவும், மோதலிலும் வீட்டுக்குள்
மறைந்திருந்த 15 பேர் கொல்லப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
சூத்திரதாரி சஹ்ரானின் மனைவி, பிள்ளைகள் காயத்துடன் மீட்கப்பட்டனர்

அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மீரிகம ஆடையகம் உன்றில் கொள்வனவு
செய்யப்பட்ட தடயங்கள் கிடைத்தன. ஆடையக சிசிரிவி கமராவை ஆய்வு செய்ததில்,
முகத்தை மூடிக் கொண்டு பெண்கள் வந்து ஆடை கொள்வனவு செய்தது தெரிய வந்தது.

சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்ட ஆடைகளில் சில, முஸ்லிம் பெண்கள் அணிபவை அல்ல. பௌத்த சமய நிகழ்வுகளில் பெண்கள் அணியும் ஆடைகள்.

இந்த ஆடைகள் கைப்பற்றப்பட்ட பின்னர் பாதுகாப்பு தரப்பு புதிய கோணங்களில்
விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். பௌத்த சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு,
அங்கும் மனத வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனரா அல்லது,
பாதுகாப்பு தரப்பால் தேடப்படும் சந்தர்ப்பத்தில் மறைந்து வாழ வசதியாக அந்த
ஆடைகளை வாங்கினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.