புதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலையில் கிருபதீபன் மரணமானது ஏன்?

யாழ்ப்பாணத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவத்தில் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இவர் கடந்த 14ஆம் திகதி வயிற்றுக் குற்று காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் குறித்த நபர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.