எந்தவித பதற்றமும் இன்றி சொந்த வீடு போல் உலாவி கொள்ளையடித்த கில்லாடி!! மன்னாரில் சம்பவம்!! வீடியோ
மன்னார் மாவட்டத்தில் அண்மைகாலமாக தொடர்சியாக திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் பெரியகமம் பகுதியில் உள்ள நான்கு வீடுகளில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் திருட்டு இடம் பெற்ற வீட்டில் இருந்த CCTV காணொளியை பார்வையிட்ட போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் சொந்த வீட்டுக்குள் நுழைவது போன்று நுழைத்து பொறுமையாக வீட்டை உடைத்து வீட்டில் உள்ள குளிர்பான பெட்டியில் இருந்து நீர் அருந்தி விட்டு வீடு முழுவதிலும் தேடுதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
அதே நேரம் குறித்த நபர் அருகில் இருந்த இன்னும் ஒரு வீட்டிலும் இவ்வாறே புகுந்து அவ்வீட்டில் இருந்த தாலி உட்பட பல லட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துள்ளார்
இவ்வாறு மன்னார் சாவற்கட்டு பகுதியில் நான்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த வீட்டார் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.