யாழில் திடீரென மயங்கி வீழ்ந்து குகதாஸ் விதானையார் மரணம்!!
யாழ்ப்பாணத்தில் மூளை காய்ச்சல் காரணமாக கிராம சேவையாளர் உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கை சேர்ந்த குமாரன் குகதாஸ் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.தீபாவளி தினத்தன்று, தனது வீட்டில் இருந்த வேளை , திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து வீட்டார் அவரை அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மரண விசாரணையின் போது, மூளை காய்ச்சலால் மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.