புதினங்களின் சங்கமம்

நயினாதீவில் புத்தர் சிலை திருடிய குற்றத்தில் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் நயினாதீவில் உள்ள பழைய விகாரையில் இருந்து புத்தர் சிலையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விகாரையில் இருந்த புத்தர் சிலையை திருடிக்கொண்டு ,படகில் ஏறி குறிகாட்டுவான் பகுதிக்கு வந்த நிலையில் இளைஞன் புத்தர் சிலையுடன் கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்ட இளைஞனை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , பொலிஸ் விசாரணையில் இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் இளைஞனை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.