வைத்தியர் அருச்சுனாவுக்கு ஆதரவாக கிளம்பியுள்ள பெண்கள் படையணி!! வீடியோ
சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக பெருமளவு பெண்கள் சமூகவலைத்தள களத்தில் குதித்துள்ளார்கள். ரிக்டொக், பேஸ்புக் என்பவற்றில் குறித்த பெண்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தமது பேஸ்புக் பக்கத்தில் எந்தவித கருத்துக்களும் தெரிவிக்காது இருந்த ஏராளமான பெண்கள் தற்போது அர்ச்சுனாவுக்கு ஆதரவான கருத்துக்களை வீடியோப் பதிவுகளாக வெளியிடத் தொடங்கிள்ளார்கள். அர்ச்சுனாவுக்கு எதிராக பதிவிடும் வைத்தியர்கள் மற்றும் ஏனையவர்களின் பதிவுகளுக்கு துணிச்சலாக எதிர்க்கருத்துக்களையும் வெளியிட்டு வருவதோடு கடும் தொனியில் அவர்களை எச்சரிக்கையும் செய்து வருகின்றார்கள்.
பெண்களின் இவ்வாறான நடவடிக்கைகள் அருச்சுனாவை எதிர்ப்பவர்களை மட்டுமல்ல அவரு்க்கு ஆதரவு கொடுக்கும் திருமணமாகத இளைஞர்களையும் பொறாமை கொள்ளும் அளவுக்குச் சென்றுள்ளது…….இங்கே வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கனகரட்ணம் சுனர்னா என்ற யுவதி கூறும் கருத்துக்களை தந்துள்ளோம்.