தமிழ் குடும்பத்தை காப்பாற்றிய சிங்களத் தாய்: கனடாவிலிருந்து தேடி வந்த தமிழர்!!
இனக்கலவரமொன்றின் போது தமிழ் குடும்பமொன்றை காப்பாற்றிய சிங்களத் தாயை பல வருடங்களின் பின்னர், காப்பாற்றப்பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர் சந்தித்த காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சுமார் 35 – 40 ஆண்டுகளுக்கு முன்னர் இனக் கலவரத்தின் போது குறித்த சிங்களக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் குடும்பம் ஒன்றை காப்பாற்றியுள்ளனர்.
குறித்த தமிழ் குடும்பம் புலம்பெயர்ந்து கனடா சென்றுள்ளதாக அந்த காணொளியில் தெரிவிக்கப்படுகிறது
நெகிழ வைத்துள்ள சம்பவம்
இந்த நிலையிலேயே தம்மை மீட்ட அந்த சிங்களக் குடும்பத்தை நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேடிச் சென்று சந்தித்துள்ளனர்.
காப்பாற்றிய தாயும், காப்பாற்றப்பட்ட குடும்பத்தை சேர்ந்த நபரும் அழும் காட்சி அனைவரும் நெகிழச் செய்துள்ளது.
இதேவேளை தமிழ் குடும்பத்தை பாதுகாத்தமைக்காக தம்மை சிங்களவர்கள் தூற்றியதாகவும் அச்சுறுத்தியதாகவும் சிங்களத் தாய் கூறி கதறியழும் காட்சி அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.