யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கற்பகதேவியைக் காணவில்லை!!
கற்பகதேவி வைதீஸ்வரன் என்னும் பெயருடைய மேற்குறிப்பிட்ட படத்தில் உள்ள 75 வயது அம்மா நேற்றைய தினம் (27.02.2024) பிற்பகல் பத்திரமுல்லையில் அமைந்துள்ள
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களக் (Passport Office) காரியாலயத்தில் இருந்து
காணாமல் போயுள்ளார். இவர் பருத்தித்துறை வியாபாரிமூலையை சொந்த இடமாகக் கொண்டதுடன், தற்போது மட்டக்களப்பில் இருந்து கடவுச்சீட்டு எடுப்பதற்கு உறவினர்
ஒருவருடன் சென்ற போது காணாமல் போயுள்ளார். அத்துடன் மறதிக்குணம் உடையவர். தங்கமணி என்று வீட்டில் அழைப்பார்கள். நகை, பணம், தொலைபேசி போன்ற பெறுமதியான பொருட்கள் எதுவும் அவரிடம் இருக்கவில்லை. விபரம் தெரிந்தால் அழைக்கவும்.
070 3939504 / 0777111780

