புதினங்களின் சங்கமம்

சுன்னாகம் என்ற. சொல் தூசணச் சொல்லா?

இது ஒரு சமூக வலைத்தளப் பதிவு! 

முன்னொரு காலத்தில் யாழ்ப்பாண இளவரசன் ஒருவன் தனது நண்பனான நந்தன் என்பவனுடன் வேட்டைக்கு கிளம்பினான்.

வழியில் வானத்தில் கொக்குக் கூட்டம் ஒன்று பறந்து செல்வதை கண்ட இளவரசன், நண்பனை பார்த்து, கொக்கு… வில்லை தா வேட்டையாட என்றான். அவ்விடம் ‘கொக்குவில்’ ஆனது.

குதிரைகள் வேகமாக சென்றுகொண்டிருந்தன. நந்தனுக்கு இளவரசன் கூறியது கேட்கவில்லை… எனவே இளவரசன் “நந்தா… வில்லை தா” என்றான்… அவ்விடம் “நந்தாவில்” ஆனது.

மீண்டும் புரியாமல் நந்தன் முழிக்கவே, இளவரசன் சத்தமாக “கொண்டா வில்லை” என்றான். அவ்விடம் “கோண்டாவில்” ஆனது.

தாமதமாக புரிந்து கொண்ட நந்தன் வில்லை கொடுத்தான். ஆனால் அதற்கிடையில் கொக்குக் கூட்டம் பறந்து சென்று பார்வையில் இருந்து மறைந்தது. இதனால் இளவரசன் “இனி வில் வேண்டாம்” என்றான். அவ்விடம் “இணுவில்” ஆனது.

தனது தாமதத்தால் தான் கொக்குக் கூட்டத்தை வேட்டையாட முடியாமல் போனது என்பதை அறியாத நந்தன், இளவரசனிடம், அருமந்த கொக்குக் கூட்டம் தப்பி விட்டது, நீங்கள் சற்று வேகமாக வேட்டையாடி இருக்கலாமே என்று இளவரனை பார்த்து சற்று நக்கலாக கூறினானாம்…

இதனால் கோவம் அடைந்த இளவரசன், நந்தனை ஏதோ வார்த்தை சொல்லி ஏசினானாம். அந்த இடம் “சுன்னாகம்” ஆனது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x