புதினங்களின் சங்கமம்

யாழில் அரச பேரூந்துகளை மறித்து தனியார் பேரூந்து உரிமையாளர்கள் இன்று அலங்கோல போராட்டம்!! பயணிகள் நடுவீதியில்!!

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் இன்றைய தினம் வியாழக்கிழை இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.

இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளது.

இந்நிலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதனால் இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்தனர்.

May be an image of 1 person, crowd and textMay be an image of 5 people, crowd and text