புதினங்களின் சங்கமம்

யாழில் விபத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்றச் சென்றவர் அதிர்ச்சியில் உறைந்தது ஏன்?

யாழ்ப்பாணத்தில் வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் வைத்திருந்த கைப்பையினுள் ஒரு தொகுதி கஞ்சா இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில், கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கைப்பையைப் பரிசோதனை செய்த போது கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிமன்ற பதில் நீதிவான் விபத்து தொடர்பாகவும் கஞ்சா மறைத்து வைத்திருந்தமை தொடர்பாகவும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.