FEATUREDLatestVampan memes

யாழில் பொலிஸ் அதிகாரிக்கும் சட்டத்தரணி சர்மினிக்கும் கள்ளத்தொடர்பு!!

மல்லாகம் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அழுத்தத்தால் குற்றவியல் வழக்குகளின் எதிரிகள் ஒரு சில சட்டத்தரணிகளை நாடவேண்டிய நிலை தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன், அதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்புகளிடமிருந்து தமக்குக் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் மல்லாகம் சட்டத்தரணிகளுடன் நடத்திய ஆலோசனையின் போதே மாவட்ட நீதிபதி இதனைத் தெரிவித்தார்.

மல்லாகம் நீதிமன்ற நியாயத்திக்கத்துக்கு உள்பட்ட சுன்னாகம், தெல்லிப்பளை, மானிப்பாய், காங்கேசன்துறை, அச்சுவேலி, வட்டுக்கோட்டை மற்றும் இளவாலை பொலிஸ் நிலையங்கள் உள்ளன.

அண்மைக்காலமாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் தொடுக்கப்படும் குற்றவியல் வழக்குகளில் எதிரிகள் சார்பில் ஒரு சில சட்டத்தரணிகளே முன்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இளம் பெண் சட்டத்தரணி சர்மினிக்கு பெரும்பாலான வழக்குகள் செல்வதாக மூத்த சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் பொலிஸ் அதிகாரிகள் சிலர், தம்மால் குறிப்பிடப்படும் சட்டத்தரணிகளையே ஒழுங்குபடுத்துமாறும் அவர்களால் மட்டுமே பிணையில் எடுக்கவோ – வழக்கை முடிவுறுத்தவோ முடியும் என சந்தேகநபர்களுக்கு அழுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் தமக்கு நன்கு அறிமுகமான சட்டத்தரணியை ஒழுங்குபடுத்த முடியாத நிலை ஏற்பட, அதுதொடர்பில் அவர்களது உறவினர்கள் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர் – முறைப்பாடு செய்தனர்.

பாதிக்கப்பட்ட தரப்பினரின் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, நேற்று வியாழக்கிழமை மல்லாகம் சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

“குற்றவியல் வழக்குகளில் குறிப்பிட்ட சில சட்டத்தரணிகளையே ஒழுங்குபடுத்துமாறு பொலிஸார் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் என்று முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அதனை அனுமதிக்க முடியாது.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பொலிஸ் அலுவலகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் அவர்களது சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு முதல் தடவையாக எச்சரிக்கை செய்யப்படும்.

மேலும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் உரிய தரப்புகளுக்கு அதுதொடர்பில் அறிவிக்கப்படும்” என்று மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா சட்டத்தரணிகளுடனான கலந்துரையாடலில் தெரிவித்தார்.