பிரித்தானிய நீதிமன்ற முன்றில் தமிழர்களை மிரட்டிய இலங்கை தூதரக ஊழியர்(Video)
இதன் போது பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி
புலம்பெயர் தமிழர்கள் நீதிமன்றின் முன்றலில் அமைதியான முறையில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையிலேயே மேற்படி வழக்கினை அவதானிக்க வந்திருந்த வினோமா என
அறியப்படும் இலங்கை தூதரகத்தின் குறித்த பெண் ஊழியர் நீதிமன்ற முன்றலில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீது இனத்துவேசத்தை தூண்டும்
வார்த்தைகளை கொட்டித்தீர்த்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக
மிரட்டல்களையும் விடுத்தார்.
வழக்கு விசாரணைகளின் முடிவில் நீதிமன்றின் உள்ளே இருந்த படி வெளியில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அவதானித்துக்கொண்டிருந்த வினோமா, வெளியே
வந்ததும் ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து இனவாதத்தை தூண்டும் வார்த்தைகளால்
திட்டியதுடன் மிரட்டல்களும் விடுத்தார்.
புரித்தானியாவில் நீதிமன்ற
முன்றலிலேயே இலங்கை தூதரகத்தின் ஊழியர் ஒருவர் தமிழர்களை மிரட்டும் செயலில்
ஈடுபட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.