பிரதமரையும், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரையும் நக்கலடிக்கும் முரளி வல்லிபுரநாதன்! வீடியோ
சமுதாய வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் அவர்களின் சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
ஐக்கிய இராச்சியத்தில் வைத்தியசாலை விதிமுறைகளையும் மருத்துவ ஒழுக்க நெறியையும் மீறியதற்காக பிரதமர் டேவிட் கேமரூன் வார்டுக்கு பொறுப்பான வைத்தியரினால் வெளியேற்றப்படுவதை காணொளி காட்டுகிறது. ஆனால் இலங்கையில் படித்த பேராசிரியரான பிரதமர் வார்டுக்குள் நுழைந்து நோயாளிகளுடன் எந்த காரணமுமின்றி உரையாடுகிறார். அதை 125 வைத்திய நிபுணர்களையும் மருத்துவ ஒழுக்க நெறியை மேற்பார்வை செய்யும் குழுவும் கொண்ட வைத்தியசாலையில் ஒருவரும் எதிர்க்கவில்லை. போதாக்குறைக்கு பெருமையாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கின்றனர்.

