28 வயது பட்டதாரி காதலி இன்னொருவனுடன் கள்ளத் தொடர்பு என சந்தேகம்!! அடித்துக் கொன்ற சிங்கள காதலன்!!
காதலனால் தாக்கப்பட்டு 8 நாட்களாக சுயநினைவின்றி இருந்த காதலி, வட்டுபிட்டியால ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (10) இரவு 11.55 மணியளவில் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி கல்லலெல்ல பிரதேசத்தில் வசிக்கும் காதலியை தாக்கிய 28 வயதுடைய அவரது காதலனை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.காதலன் கடந்த 3ஆம் திகதி அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவரது காதலி வேறொரு இளைஞனுடன் மேற்கொண்ட காதல் தொடர்பிலான உரையாடல் தொடர்பிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.காதலனும் காதலியும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் விவசாய பட்டதாரிகள். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது இருவருக்குமிடையில் ஆரம்பித்த காதல் உறவு 4 வருடங்களாக தொடர்கிறது.
சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இருவரும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய நிலையில், நிட்டம்புவ பகுதியில் உள்ள கோழி இறைச்சி தொழிற்சாலையில் காதலி வேலை செய்து வந்தார். அவரது சகோதரனும் அங்குதான் பணிபுரிகிறார். இருவரும் விடுதியில் தங்கியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான காதலன் இரத்தினபுரியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கடந்த 2ஆம் திகதி காதலியை சந்திக்க காதலன் நிட்டம்புவ சென்றார். பணி முடிந்து வெளியில் வந்த காதலியை விடுதிக்கு அழைத்து சென்றள்ளார். காதலி வேறு ஒரு இளைஞனுடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டதாகக் கூறி காதலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரவு 8 மணியளவில் ஹோட்டல் அறையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, காதலி தாக்கப்பட்டுள்ளார். காதலன் மது அருந்தியபடி காதலியுடன் தராறில் ஈடுபட்டு, தாக்கியுள்ளார்.நீணஹடநேரமாக காதலி அந்த அறையில் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.காதலன் முழங்காலால் காதலியின் நெஞ்சில் அடித்ததில் காதலி படுகாயமடைந்து மயக்கமடைந்துள்ளார். பின்னர் காதலன் முச்சக்கரவண்டி ஒன்றை கொண்டு வந்து மயங்கிய நிலையில் இருந்த காதலியை வட்டுபிட்டியால ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.தாக்குதல் நடந்த ஹோட்டல் அறையின் தரையில் பல இரத்தக்கறைகள் இருந்தன.
அத்தனகல்ல பதில் நீதவான் சம்பத் கஸ்தூரியாராச்சி, தாக்குதல் இடம்பெற்ற அத்தனகல்ல எல்லக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று (11) நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வத்துபிட்டிவல அடிப்படை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.பிரேத பரிசோதனைக்கு பின், உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து, அடக்கம் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.சடலத்தின் பிரேத பரிசோதனை வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

