கொழும்பு தற்கொலைத் தாக்குதல் சம்பவம்!! மேலும் 5 முஸ்லீம்கள் கைது!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் 05 சந்தேகநபர்களை இன்று (24) கைதுசெய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவப்பொத்தான பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஹொரவப்பொத்தானயின் கிவுலேகட பிரதேசத்தைச் சேர்ந்த ஹொரவப்பொத்தான பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றக் கூடியவர் என்று அவர் கூறியுள்ளார்.
சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஹொரவப்பொத்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.