புதினங்களின் சங்கமம்

பாடசாலைக்கு அருகில் 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டதால் பதற்றம்!!

பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றிற்கருகிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த குண்டுகள் நேற்றையதினம் வியாழக்கிழமை இரவு மீட்க்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாடசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஒருவர் இரவு உணவிற்காக சென்று மீண்டும் பணிக்கு திரும்பிய போது சந்தேகத்திற்கிடமான பொதியொன்றினை அவதானித்துள்ளார்.

அதனை சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதோடு, அவர்களுடன் இணைந்து சோதித்த போதே அதிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு அறிவித்ததோடு, அதிபர் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மீட்கப்பட்ட கைக்குண்டுகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.