புதினங்களின் சங்கமம்

சற்று முன் யாழ் பருத்தித்துறை பஸ்சில் பயணம் செய்த யுவதி குத்தியதில் இளைஞன் படுகாயம்!! காதல் பிரச்சனையாம்!!

யாழிலிருந்து மாலை 6 மணிக்குப் பருத்தித்துறை நோக்கிப் புறப்பட்ட 750ம் இலக்கப் பேருந்தில் யுவதி ஒருவர் இளைஞனுக்கு மோதிரக் கையால் தலையில் மளமளவென்று குட்டியதில் இளைஞன் கத்திக் குளறியுள்ளார். தலையிலிருந்து இரத்தம் வெளியேறிய நிலையில் சிறுப்பிட்டிப் பகுதியி்ல் பஸ் நிறுத்தப்பட்டது. பஸ் நிறுத்தியவுடன் அங்கிருந்து யுவதி இறங்கிச் சென்றுவிட்டார். யுவதி வழமையாக ஆவரங்கால் பகுதியில் இறங்குவதாக தெரியவருகின்றது. இளைஞன் நெல்லியடிப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகின்றது. பஸ்சை பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல ஆயத்தப்படுத்திய போது பஸ் பயணிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞனுக்கு பாரதுாரமான காயம் இல்லை என கூறி தலையில் கட்டுப் போட்டுவிட்டு அவனை நெல்லியடி வரை பஸ்சிலேயே கொண்டு சென்று இறக்கியுள்ளார்கள். யாழிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் புறப்படும் 750ம் இலக்க அரச பேரூந்தில் யாழ் நகரப்பகுதியிலிருந்து மாலை 6 மணி மற்றும் 7 மணிக்கு இடையில் ஏறும் இளைஞர், யுவதிகள் பஸ்சிற்குள் காதல் என்ற போர்வையில் அஜால் குஜால் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனராம். நெல்லியடிப்பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை தாக்கிய யுவதி ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்தவராம். வழமையாக இருவரும் ஒன்றாக ஏறி பஸ்சில் இருப்பவர்களாம். ஆனால் நேற்று குறித்த யுவதி பஸ்சில் வராததால் இளைஞன் இன்னொரு யுவதியுடன் கதைத்து பேசிக் கொண்டுவந்துள்ளார். இந்த தகவலை யுவதி அறிந்த பின்னரே இன்று இளைஞன் மீது பஸ்சிற்குள் தாக்குதல் நடாத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. பஸ்சில் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் இது தொடர்பாக அவதானம் செலுத்துமாறு பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.