புதினங்களின் சங்கமம்

இன்று புதிதாக கடமையேற்றவுடன் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியது என்ன?? (Photos)

பொறுப்புடனும் உணர்வுடனும் எனது கடமைகளை செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீ சற்குணராசா தெரிவித்தார்.

இன்று காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தை வளமாக்குவதற்காக இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு பொதுவான நிறுவனம் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலைமையில் உலகத்திலே என்றுமில்லாத வகையில் விமான நிலையங்கள் கூட மூடப்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது. அப்படியான சூழ்நிலையில் பல்கலைக்கழகத்தினை நிலை நிறுத்துவது என்பது சவாலான விடயம். எனவே குழுவாக இணைந்து இதனை செயற்படுத்தவுள்ளேன்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரம் ஊழியர்கள் கடமையாற்றுகிறார்கள். 11000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது பெரிய குழு இந்த குழுக்களின் தலைமைத்துவம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை சிறப்பாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இது கடவுளால் வழங்கப்பட்டுள்ள பதவியாகும் இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இந்த பல்கலைக் கழகத்தை நேசித்து செயற்படுகின்றார்கள். இந்த பல்கலைக்கழகம் இந்த மக்களுடைய ஒரு சொத்து. யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு கிழமைகளாக யார் அந்த புதிய துணைவேந்தர் என மக்கள் வினவினார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள ஆர்வம் மிகப் பெரியது. எனவே இந்த பல்கலைக் கழகத்தினை மக்கள் மிகவும் நேசித்து செயற்படுகின்றார்கள். கல்வியை ஆதாரமாகக் கொண்ட சமூகம் இந்த பல்கலைக்கழகம் மீது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது. கல்வி பாரம்பரியத்தின் கலைக்கோயில் இந்த பல்கலைக்கழகம் ராமநாதனால் வழங்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி இன்று பல்கலைக்கழகமாக மிளிர்ந்திருக்கின்றது. அடுத்த மூன்று வருடங்களுக்கு சிறப்பாக செயற்படுத்துவதற்காக என்னிடம் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

எனவே மிகப் பொறுப்புடனும் உணர்வுடனும் எனது கடமைகளை செய்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர் பார்க்கின்றேன். குறிப்பாக ஊடகங்கள் உரிய முறையில் செயற்பட வேண்டும் கருத்து முரண்பாடுகள் பல்கலைக்கழகத்தில் வரவேற்கப்படும். இதுவே கல்வி நடவடிக்கையில் ஒரு முக்கியமான விடயம். அனைத்து விடயங்களும் கலந்தாலோசிக்கப் பட்டு நிறுவனத்தை முன்னிறுத்தி முடிவுகள் எடுக்கப்படும்.

தனிப்பட்ட ரீதியில் எந்த முடிவும் எடுக்கப்படாது ஒரு நிறுவனம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படும் துணைவேந்தர் அதிகாரிகள் என்றல்லாது எதிர்வரும் காலத்தில் நிறுவனம் சார்ந்து செயற்படும் என்றார்.

Image may contain: one or more people, people sitting and indoorImage may contain: 6 people, people standing and outdoorImage may contain: 4 people, people standing and outdoorImage may contain: 4 people, people standing, tree and outdoor