FEATUREDLatestVampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ் மண்கும்பான் பள்ளிக்கூட அதிபர் ஹென்றிரீகன் சின்ன பிள்ளைகளின் முதுகில் வரிஞ்சு கட்டினது சரியா?

அடியாத மாடு படியாது என்று ஒரு பழமொழி இருக்குது. அதே நேரம் கற்பூரபுத்தி, கரிபுத்தி, வாழைமட்டை புத்தி என்று புத்தியை 3 வகையாகப் பிரித்து மகாபாரதத்தில் விதுரர் கூறியதாகவும் தகவல் உள்ளது. கற்பூர புத்தி என்றால் தீ பட்டவுடன் எரிவது போல் ஒரு விடயத்தை உடனடியாக கிரகித்துக் கொள்வதாகவும், கரி புத்தி எனின் ஊதி ஊதி எரித்தால் மட்டுமே தொடர்ந்து எரிவதாகவும், வாழை மட்டையில் எவ்வளவு தீ பிடித்தாலும் எரியாது என்பதாகவும் விதுரர் கூறியுள்ளாராம்.

முன்னைய காலங்களில் பாடசாலைகளிலும் ரியூசன்களிலும் நாங்கள் வாங்காத அடியா, நாங்கள் வாங்காத பேச்சா என்று கூறுபவர்களும் உள்ளார்கள். அப்படி அடிவாங்கி இருந்ததாலதான் இப்புடி ஒழுக்கமா இருக்கிறம் என்டு கூறுபவர்களும் இருக்கிறாங்கள். ஆனால்….. சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்பவர்கள், மதுவுக்கு அடிமையானவர்கள், மது போதையில் அலுவலகங்களில் இருப்பவர்கள், பெண் பலவீனமான அலுவலர்கள் போன்றவர்களில் 80 வீதமானவர்கள் அந்தக்காலத்தில் அடிவாங்கிப் படித்த 35 வயதுக்கு மேற்பட்டவர்களே….அmண்மையில் தென்னிலங்கை அரச விடுதியில் யாழில் உள்ள கல்வி அதிகாரிகள் குடித்துக் கும்மாளமிட்டு விடுதியில் மற்றைய அறைகளில் இருந்தவர்களை துாங்க விடாது செய்து அந்த விடயம் தற்போது விசாரணைக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே ஆராய்ந்து பாருங்கள் உண்மை புரியும்… அந்தக் காலங்களில் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்த இயக்க நிர்வாகத்தின் பயத்தின் காரணமாக ஏராளமான திருவிளையாடல்களை அப்போது செய்ய முடியவில்லை… போதைப் பொருள் என்ற பேச்சுக்கே இடமில்லை… பத்திரிகைகளில் அவ்வாறான ஒரு செய்தி வரவில்லை… அவ்வளவுதான் விசயம்…

ஒரு பிள்ளைக்கு கணிதம் அறவே மூளைக்கு ஏறவில்லை என்றால் அந்த பிள்ளைக்கு முதுகில் வரிந்து கட்டுவது சரியா? இவ்வாறான பிள்ளைகளுக்கு அவர்கள் எவற்றில் திறமையாக உள்ளார்கள் என அறிந்து அவர்களை ஊக்கிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஹொலசிப் பரீட்சையில் பாஸ் பண்ணுவதற்காக அவர்களை உரித்து எடுக்க கூடாது.

மண்கும்பான் பள்ளிக்கூட அதிபர் ஹென்றீரீகன் கல்வி கற்கும் காலத்திலும் புலமைப்பரிசில் பரீட்சை இருந்துள்ளது. அதில் அவர் பாஸ் பண்ணினாரா? அவர் பாஸ் பண்ணாது விட்டிருந்தால் அவர் படித்த பாடசாலையில் அவருக்கு மந்த புத்தி என்று கருதி இருப்பார்களா? குறித்த அதிபர் யாழ்பல்கலைக்கழகத்தில் புவியியலும் சமூகவியலும்தான் பாடமாக எடுத்துள்ளார். ஏன் அவர் ஏ.எல் பாடத்தில் டொக்டருக்கு படிக்கவில்லை? டொக்டார் இஞ்சினியராக அவர் படிக்காததற்கு காரணம்.அவருக்கு மந்த புத்தியா? அல்லது மக்கு மாணவனாக அப்போது இருந்தாரா?

பாடசாலையிலேயே ஒவ்வொரு மாணவனும் தனது மூளை ஆற்றல் திறன் மற்றும் தனக்கு விருப்பமான ஆசையான பாடங்களை உயர்தரத்தில் கற்பதற்கு வழி உள்ள போது அந்தப் 10 வயதுப் பிஞ்சுகளை வைத்து வரிந்து எடுத்த ஹென்றிரீகனின் மூளை ஆற்றலை என்னவென்று சொல்வது…

பாடசாலையில் ஒரு பிள்ளை சில பாடங்களுக்கு அல்லது அனைத்துப் பாடங்களுக்கும் குறைந்த பெறுபேற்றை எடுத்தால் அந்தப் பிள்ளையின் கற்கும் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர முதுகில் வரிஞ்சு கட்டப்படாது.

பாடசாலைகளில் மாணவர்கள் ஒழுக்க கேடாக அல்லது கட்டளைகளை செவிமடுக்காது செயற்பட்டால் அவர்களுக்கு தண்டனை கொடுப்பது தவறு என பெற்றோர்கள் கூற மாட்டார்கள். கொடுக்கும் தண்டனைகள் முட்டாள்தனமானதாக இருந்தால் எந்தப் பெற்றோரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு மாணவனுக்கு ஆசிரியர் காதைப் பொத்தி அடித்து அவனுக்கு செவிப்பறை பாதிக்கப்பட்டால் அந்த மாணவனின் பெற்றோர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். மாணவர்களை தண்டிப்பது தவறு அல்ல… ஆனால் இவ்வாறான முரட்டுத்தனமான தாக்குதல்களை பெற்றோர்கள் ஒரு போதும் ஏறு்றுக் கொள்ள மாட்டார்கள். இது உளவியல் செயற்பாடு. அவர்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தால் மாணவர்களை நாம் எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என பாடசாலை நிர்வாகம் கூறுவது அந்த நிர்வாகத்தின் மட்டமான திறனாகத்தான் இருக்கும்.

ஹென்றீரீகனும் பெண்பிள்ளை ஒன்றுக்கு அப்பாவாக உள்ளார். அந்தப் பிள்ளையின் முதுகில் பாடசாலை அதிபர் வரிந்து கட்டியிருந்தால் அவர் பொறுத்துக் கொள்வாரா? இந்தப் பதிவு ஹென்றீரீகனுக்கு மட்டுமானது அல்ல.. அவரைப் போல முட்டாள்தனமாக செயற்படும் சில அதிபர், ஆசிரியர்களுக்கானது…

ஏற்கனவே ஹென்றீரீகன் புங்குடுதீவு பாடசாலையிலும் இதே போல் செயற்பட்டு பெற்றோரால் தாக்குதலுக்கு உள்ளாக முற்பட்டவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறானவர்களை மீண்டும் பாடசாலைகளில் தலைமைப் பொறுப்பில் விட்டால் அதோ கதிதான்….

வம்பன்….