Home புதினங்களின் சங்கமம் ஊரடங்கு நேரத்திலும் சாராயம் விற்கும் உதயராசாவுக்கு நடவடிக்கை எடுப்பீர்களா??

ஊரடங்கு நேரத்திலும் சாராயம் விற்கும் உதயராசாவுக்கு நடவடிக்கை எடுப்பீர்களா??

எமது மக்களுக்காக நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தி உலகமே கொரோன வைரஸினால் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் பயந்து ஒடுங்கி இருக்கும் சூழ்நிலையில். வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட சாப்பாட்டுக்கு தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் கல்முனைப் பிரதேசத்தில் பாண்டிருப்பில் சாராயம் விற்பதில் பிரசித்தி பெற்ற முகவர் உதயராஜா (0779584005) என்பவர் தனது அக்காவின் கணவர் உதவியுடன் சேர்ந்து வெள்ளை கலர் ஸ்கூட்டர் மோட்டார் பைக்
(EP BDZ-7831) மூலமாக நடமாடும் சாராய விற்பனை செய்வதன் மூலமாக சாதாரணமாக ஒரு போத்தல் 1600/= ரூபாய் விற்பனை செய்ய வேண்டிய சாராயத்தை இவர்கள் ஒரு போத்தல் 3800/= ரூபாய்க்கு விற்பனை செய்து வியாபாரத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். கரோனா வைரஸ் காரணமாக அன்றாட வாழ்க்கைக்கு செலவு செய்வதற்காக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்ட 5000/= வட்டியில்லா கடனை பெற்றுக் கொண்டு அந்த பணத்தினை கொண்டுபோய் இவர்களிடம் 3800/= ரூபாய்க்கு ஒரு போத்தல் சாராயம் வாங்கி குடித்துவிட்டு வருகிறார்கள். நாடு பூராவும் ஊரக சட்டம் போடப்பட்ட காரணத்தை வைத்துக்கொண்டு நடமாடும் சாராய விற்பனை சேவை மூலமாக தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வீடு வீடாகச் சென்று சாராய வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் தனது சுயலாபத்திற்காக பல குடும்பத்தை சீரழித்து தன்னுடைய குடும்பம் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் கயவர்கள் இவர்கள். பாண்டிருப்பு கிராம உத்தியோகத்தர் கூட இதனை கண்டும் காணாமல் நடந்து கொண்டு வருகிறார். நான் இவர்களுக்கு எதிராக கல்முனை போலீஸ் மூலமாக முறைப்பாடு ஒன்று போடுவதாக நினைத்திருக்கிறேன் இதனை மிக விரைவில் செய்து முடிப்பேன். கல்முனை போலீஸ் அதிகாரிக்கு இந்த தகவல் சென்றடைய வேண்டும். இது மட்டுமல்லாமல் மேதகு ஜனாதிபதி கவனத்திற்கும் இந்த தகவல் சென்றடைய தயவுசெய்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்க இதனை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுவதால் பல குடும்பம் நல்ல நிலைக்கு வர முடியும். இந்த தயவு செய்து நான் உங்களிடம் கை கூப்பி மன்றாடி கேட்டுக்கொள்ளுகிறான். இதனை உங்கள் நண்பர் மூலமாக பகிர்ந்து கொள்வதால் பல குடும்பத்தின் சூழ்நிலை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியும் கொரோன சூழ்நிலையை பயன்படுத்தி சாராய வியாபாரம் செய்பவரையும் சாராயத்துக்கு அடிமையாகி குடிப்பவர்களையும் கட்டாயம் நிறுத்த முடியும் அவர்கள் நிரந்தரமாக நிறுத்திக் கொள்ள உங்களுடைய பங்கு நிச்சயம் தேவை.