புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்த இளைஞன்!!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (17) மாலை இந்த சம்பவம் நடந்தது.

கைவேலி பகுதியை சேர்ந்த 24 வயதான ஒருவரே உயிரை மாய்த்தார்.

அவர் உயிரை மாய்ப்பதற்கு முன்பாக கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார். அதில் கடன் தொல்லையால் உயிரை மாய்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சடலம் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.