கிளிநொச்சியில் தாய், மகன் படுகொலையின் பின்னணி இதுதான்!!
கிளிநொச்சியை இன்று உலுக்கிய இரண்டு கொலைகள் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய் மற்றும் மகனை அவர்களது உறவினரே கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலைகாரரான சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஜெயந்தி நகரில் தாய் மற்றும் மகன் வெட்டப்பட்ட நிலையில் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

