புதினங்களின் சங்கமம்

செல்வச்சந்நிதி ஆலயத்தின் பின்புறம் சடலமாக மிதப்பவர் யார்?

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை (11) காலை அப்பகுதியில் நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.